வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:46 IST)

அடுத்து 10 நாட்களுக்கு அனைத்து காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு!!

சென்னையில் இன்னும் 10 நாட்களுக்கு அனைத்து காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
கடந்த சில நாட்களாக கடும் மழை மற்றும் தக்காளி வரத்து குறைவு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்வை சந்தித்தது. இதனால் கிலோ ரூ.150 வரை விலை உயர்ந்தது. நேற்று இதன் விலை ரூ.70 ஆக இருந்தது. தக்காளி மட்டுமின்றி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
தொடர் மழையினால் காய்கறிகள் நீரில் மூழ்கி அழுகி போனதால் அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது என்றும் இதனால் இன்னும் பத்து நாட்களுக்கு  காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உச்சத்தில் இருக்கும் என்றும் அதன் பிறகு  விலை படிப்படியாக குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.