இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்களின் கார்கள் விற்பனையாகி வரும் நிலையில், நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் கார்களும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா கார்கள் இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும், இந்த கார்களின் குறைந்தபட்ச விலை ₹22 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வகையில், ஏப்ரல் முதல் விற்பனையை தொடங்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மும்பை மற்றும் டெல்லியில், டெஸ்லா நிறுவனம் அலுவலகம் தொடங்க இருப்பதாகவும், இதற்கான ஆட்களை எடுக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்தபோது பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதேபோல், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு, தற்போது இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva