கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!
கோவையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த பள்ளியில் பணிபுரியும் ஓவியம் மற்றும் யோகா கலை ஆசிரியர் ராஜன் (56) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளி முதல்வரிடம் முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து, பள்ளி முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட மாணவி மட்டுமின்றி, மேலும் சில மாணவிகளும் பாலியல் ரீதியாக அந்த ஆசிரியரால் தொல்லை அடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளி முதல்வர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் ராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது, அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva