திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (20:43 IST)

விலைவாசி உயர்வு ...மக்கள் அதிர்ச்சி…

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கட்டுமானப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய புதிய  விலை நிலவரம்:

ஜல்லி – 5000
செங்கல் – 27000
சிமெண்ட்  விலை- ரூ.520
கம்பி 1 டன் – 72000

மணல் 1 யூனிட்-  5,200

என பழைய விலையை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் நடுத்தர மக்களும் ஏழை மக்களும் சொந்த வீடு கட்டுவது கனவாகுமோ என கேள்விக் குறியாகியுள்ளது.

இந்தக் கட்டுமானப் பொருட்களின் விலையை விரையில் குறைக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில்துறையினரும் மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.