திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 26 மே 2021 (20:05 IST)

தங்கத்தின் விலை ஏற்றம்....மக்கள் அதிர்ச்சி

சர்வதேச  சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டளர்கள், அதிகளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை நாள் தோறும் ஏற்றம் கண்டுவருகிறது. இன்று மேலும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரொனா இரண்டாம் அலையின் மேலும் பரவிவருகிறது. எனவே அமெரிக்கா டார்ல், எண்ணெய் போன்றவற்றில் முதலீடு செய்வதைவிட தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், இதன் தாக்கல் அதிகரித்துள்ளது.  இன்று வர்த்தக நேர முடிவில் தங்கம் 22 கேரட் 36, 816 ரூபாயாக உயர்ந்துள்ளது.  இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது ஒரு பவுனுக்கு ரூ.384 அதிகரித்து, ரூ37,200 தாண்டியது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4650 ஆக அதிகரித்துள்ளது.