செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (08:30 IST)

அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர் பணிநீக்கம்!

anna university
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பதிவாளர் ஒருவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பதிவாளர் கணேசன் என்பவரை பணி நீக்கம் செய்து உயர் கல்வித்துறை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
வெளிநாடுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வந்த புகார்களின் அடிப்படையில் பணி ஓய்வு பெற்ற மூன்று நாட்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 
 
பணி ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில் பதிவாளர் கணேசன் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது