தொடர்புடைய செய்திகள்
- ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது: ஆன்லைன் சூதாட்டம் குறித்து அன்புமணி
- ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதலுக்கு வலியுறுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- ஆன்லைன் சூதாட்ட விளம்பர சர்ச்சை… சரத்குமாரை ஊமைக்குத்து குத்திய விஷால்!
- நான் சொன்னா என்ன வேணாலும் செய்வாங்களா? – ரம்மியால் சரத் ஆதங்கம்!
- ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் 36வது தற்கொலை: அன்புமணி ராமதாஸ் வேதனை
ஆன்லைன் ரம்மி தங்க முட்டையிடும் வாத்து.. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
ஆன்லைன் ரம்மி தங்க முட்டை இடும் வாத்து என்றும் அதனால்தான் அதை ஒழிக்க சட்டம் ஏற்றாமல் அரசு இருப்பதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ஆன்லைன் ரம்மி மூலம் வரக்கூடிய வருவாயில் வருமான வரியை கோடிக்கணக்கில் மத்திய அரசு பெறுகிறது என்றும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டின் கீழ் 28 சதவீதம் வரை வசூலிக்க உரிமையை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி சட்டத்தின் மூலமாக தடையை கொண்டு வராமல் இருப்பதற்காக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த சூழ்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் தடை விதிக்க மறுப்பதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றும் தங்க முட்டை இடும் வாத்தை யார் தான் வெற்றி சமைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
