1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (08:46 IST)

பிரான்ஸ் அதிரடி உத்தரவு: அவசர அவசரமாக நாடு திரும்பும் பிரிட்டன் மக்கள்!

பிரான்ஸ் அதிரடி உத்தரவு: அவசர அவசரமாக நாடு திரும்பும் பிரிட்டன் மக்கள்!
பிரான்ஸ் அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரிட்டன் மக்கள் அவசர அவசரமாக சொந்த நாடு திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரிட்டனில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருவதை அடுத்து அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களை பல நாடுகள் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்து பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் மக்கள் அவசர அவசரமாக சொந்த நாடு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று முதல் பிரிட்டன் சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளதால் ரயில் மற்றும் விமானங்களுக்காக பிரிட்டன் கிளம்பும் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
ஆனால் அதே நேரத்தில் டிரக் டிரைவர்கள், பிரான்ஸ் நாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் பிரான்ஸ் நாட்டில் தங்கலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது