செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (19:17 IST)

மதச் சண்டை, இன சண்டை தூண்டிவிடுவது திமுக - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில்  அதிமுக சார்பில் அதிமுக நிறுவனவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது. 
இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக இயக்கத்தை வீழ்த்தலாம் என நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பரிசாகக் கிடைத்துள்ளது. அதிமுகவை வீழ்த்த இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும் என தெரிவித்தார்.
 
மேலும், நாட்டில் இனச் சண்டை, மதச்சண்டை ஏற்படுத்தி மக்களிடம் சண்டையை தூண்டிவிட்டு திமுக அதில் குளிர்காய்கிறது என விமர்சித்தார்.