திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (12:56 IST)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்; ஸ்டாலின் அதிரடி

குடியரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மாபெரும் பேரணி நடத்தினர்.

அதே போல் கேரளாவிலும் பஞ்சாப்பிலும் குடியரசு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில். திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கைழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது.