ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (13:32 IST)

சாதிச்சான்றிதழுக்கு வரிசையில் நிற்கும் நிலை அவசியம் தானா? மக்கள் நீதி மய்யம் அறிக்கை

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதை விட்டுவிட்டு சாதிச்சான்றிதழுக்கு வரிசையில் நிற்கும் நிலை அவசியம் தானா? என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ”5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் பொதுத்தேர்வு மாணவர்களுடைய கல்விக்கு பாதகம் விளைவிப்பது என்று நமது கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தோம். இன்று அதே பொதுத்தேர்விற்காக பல பெற்றோர்கள் தாசில்தார் அலுவலகங்களில் சாதிச்சான்றிதழ்  வாங்க நிற்கவேண்டிய அவலநிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் செயல்பாடுகளை விட்டுவிட்டு தேர்வெழுத சாதிச்சான்றிதழுக்கு வரிசையில் நிற்கும் நிலை அவசியம் தானா?”