1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Relief Tokens Distributed for Cyclone-Affected Families

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணம்: இன்று முதல் டோக்கன் விநியோகம்

relief
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதற்காக இன்று முதல் டோக்கன் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்பட சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. 
 
இதை அடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, விளை நிலங்களும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். 
 
அந்த வகையில் ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் இன்று வீடுகளுக்கு நேரடியாக வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பரோட்டா சாப்பிட்ட கபடி வீரர் நெஞ்சு வலியால் மரணம்: திருமணமான ஒரே வருடத்தில் சோகம்..!