1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (16:05 IST)

விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு..!

பிஎஸ்எல்வி-சி59  என்ற ராக்கெட் இன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 
 
சூரியனின் புறவெளி பகுதியை  ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ’ப்ரமோ 3’ என்ற செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல் வி சி59 என்ற ராக்கெட் நேற்று மாலை 4:08 மணிக்கு செலுத்தப்பட திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கான கவுண்டவுன் தொடங்கியது. ஆனால் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 4.06 மணிக்கு வெளியிடப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில், சற்று முன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல் வி சி59 என்ற ராக்கெட் செலுத்தப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த ராக்கெட் மூலமாக, வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு இருப்பதாகவும், சூரியனின் ஒளிவட்ட பாதையை ஆய்வு செய்ய இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இன்று பிஎஸ்எல் வி சி59 ராக்கெட் விரைவில் செலுத்தப்பட உள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran