திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (20:53 IST)

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலை பரவிவரும் நிலையில் இன்னும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில்தான் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  சமீபத்தில் தமிழக அரசு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், ஜூன் மாதம் 3 வது வாரத்தில் இருந்து 11 ஆம் வகுப்புகளைத் தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்ல் பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும்  10 சதவீதர்ம் முதல் 15 % வரை கூடுதலாக சேர்க்கை நடத்தலாம் எனவும்,  குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் இதற்காக பள்ளியிலேயே தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யலாம் எனவும், அதிக விண்ணப்பங்கள் ஒரு பாடப்பிரிவுக்கு வந்தால் இதுதொடர்புடைய பாடங்களில் இருந்து 50 வினாக்களுக்குத் தேர்வு நடத்தி அதன் மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை அனுமதிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், தொலைத் தொடர்பு மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.