வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (20:29 IST)

தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேர்த்திற்குத் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, புதுவை, காரைகால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.