திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (15:46 IST)

தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நாளை முதல் தமிழகத்தில் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும்  அரசு வெளியிட்டுள்ளது.
அதில், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம் எனவும், வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித் தனியே வாசல்கள் இருக்க வேண்டுமெனவும் முக்கியமாக நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.