மனைவியை கொன்ற கணவனை அடித்து நொறுக்கிய உறவினர்கள்...

murder
Last Updated: வியாழன், 24 ஜனவரி 2019 (17:10 IST)
சேலம் மாவட்டத்தில் தன்னுடன் வந்து வாழ மறுத்த மனைவியை கொடூர கணவனை உறவினர்களே பலமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வீராணம் பள்ளிப்பட்டியில் வசித்து வந்தவர் மாதேஷ் . இவரது மனைவி பெயர் செல்வி. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தன் தாயின் வீட்டிற்குச் சென்றார்.
 
ஆனால் குழந்தை பிறந்த பின்னும் கணவருடைய வீட்டிற்கு  செல்லவில்லை என்று தெரிகிறது. அதனையடுத்து நேற்று இரவு வேளையில் தன்னுடைய மாமனார் வீட்டிற்குச் சென்ற மாதேஷ், தன் மனைவியை தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். ஆனால் செல்வி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் 
வீட்டில் எல்லோரும் இருக்கும் சமயத்தில் தன் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். அதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் மாதேஷை அடித்து நொறுக்கினர். 
 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மாதேஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது


இதில் மேலும் படிக்கவும் :