புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (12:15 IST)

ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கும் தீர்மானம்: சி.வி. சண்முகம் - கே.பி முனுசாமி வாக்குவாதம்

kpm and cvs
ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கும் தீர்மானம்: சி.வி. சண்முகம் - கே.பி முனுசாமி வாக்குவாதம்
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது அவர் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை பிடித்து விட்டார்
 
ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வமும், ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமியும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டுவர கேபி முனுசாமி முயன்றபோது சிவி சண்முகம் அதற்கு எதிராக கடும் வாக்குவாதம் செய்ததால் அதிமுக பொதுகுழுவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அதிமுக பிரச்சனை சுமூகமாக முடிவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.