வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (13:20 IST)

பட்டியலினத்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை..!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட இருப்பதாக தனக்கு தகவல் வந்திருப்பதாகவும் அந்த மாற்றத்தின் போது துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பதவிகள், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. பட்டியலினத்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி ஆகும்.
 
இந்த அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்திகிறேன் என கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
 
Edited by Siva