1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RB Udhayakumae arresred while protest toll gates

சுங்கச்சாவடியை எதிர்த்து போராட்டம்! – ஆர்.பி.உதயக்குமார் கைது!

udhayakumar
மதுரையில் சுங்கச்சாவடியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி.உதயக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகமான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அப்படியாக மதுரை – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கப்பலூர் அருகே சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசால் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 5 சுங்கச்சாவடிகள் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல கப்பலூர் சுங்கச்சாவடியையும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் சுங்கச்சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி