திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (15:08 IST)

ஜூலை 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு! – அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

toll gate
கடந்த சில மாதங்கள் முன்னதாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்கசாவடியில் மேலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சுங்கக்கட்டணத்தை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் உயர்த்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்களுக்கான கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.33 ஆகவும், வணிக வாகனங்களுக்கு ரூ.49ல் இருந்து ரூ.54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.