வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2019 (07:08 IST)

கமலை விட சாதனை செய்தவரா ரஜினி? விடுதலை சிறுத்தைகள் எம்பி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு கோல்டன் ஐகான் விருது அளிக்கவுள்ளதாக அறிவித்தது. இந்த விருதை விரைவில் பெறவுள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி ரஜினிகாந்தை பிடிக்காத அரசியல்வாதிகள் கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி இரவிக்குமார் அவர்கள் தனது டுவிட்டரில், நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் கமல்ஹாசனை விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார்? என்று பதிவு செய்துள்ளார் 
 
ரஜினிக்கு விருது அறிவிப்பு மறுநாள் கமலஹாசனுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை? என்ற ரீதியில் கேள்வி ரவிகுமார் எம்பி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது ரஜினிக்கு விருது கொடுத்ததை மறைமுகமாக கண்டிப்பதாக கருதப்படுகிறது 
 
கமலஹாசனை விட பல சாதனைகள் செய்து நடிப்பில் சிகரம் என்றும் கமல்ஹாசனுக்கே குரு என்று என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை என்பதும் இதுகுறித்து எந்த அரசியல்வாதியும் கேள்வி எழுப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது