தொடர்புடைய செய்திகள்
- ’நல்லவர் வல்லவர் ரஜினி ’: அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் - செல்லூர் ராஜூ அதிரடி
- 'ரஜினிகாந்த்' உலகலாவிய விருதுகளை பெறவேண்டும் - வைகோ நெகிழ்ச்சியுடன் வாழ்த்து
- 'படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா' - கவர்னர் தமிழிசை டுவீட்
- ரஜினிக்கு மத்திய அரசு விருது!
- கவிஞர் சினேகனுக்கு கமல்ஹாசன் கொடுத்த புதிய பதவி!
24 மணி நேரம் கழித்து ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று மத்திய அரசு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி’ என்கிற சிறப்பு விருதை அறிவித்தது. இந்த விருது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட உள்ளது. இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் ரஜினிக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி’ விருது அறிவிக்கப்பட்டவுடன் இந்திய திரையுலகமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. குறிப்பாக தமிழ் திரையுலகில் ரஜினிக்கு வாழ்த்து சொல்லாதவர்களே இல்லை எனலாம். தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும், விருது அறிவித்த மத்திய அரசுக்கும் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தனித்தனியாக நன்றி கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்ட ஒருநாள் கழித்து இன்று மாலை அவருடைய நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. என்னதான் 40 ஆண்டுகால நண்பர் என்றாலும் இன்றும் ரஜினியும் கமலும் தொழில்முறை போட்டியாளர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினிக்கு முதல் நபராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
