செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2019 (13:06 IST)

'ரஜினிகாந்த்' உலகலாவிய விருதுகளை பெறவேண்டும் - வைகோ நெகிழ்ச்சியுடன் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நட்சத்திர விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ தனது   வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். ஆரம்ப காலத்தில் பேருந்து நடத்துநராக இருந்தவர் , இயக்குநர் சிகரம் பாலச்சந்தரனின் பார்வை பட்டு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்தார்.
 
இந்நிலையில்,வரும் நவம்பர் 20 ஆம் தேதி கோவாயில் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில்   திரைப்படத்துறையில் நடிகர் ரஜினியின்  சேவையைப் பாரட்டி அவருக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூபிலி என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
இதற்கு, பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் , அரசியல்வாதிகள், தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
அதில், ரஜினி இன்னும் பல உலகளாவிய விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.