1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (11:32 IST)

ரஜினிக்கு மத்திய அரசு விருது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் கடந்த 44 ஆண்டுகளில் 167 படங்களில் நடித்து முடித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்திலும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார்.
 
ரஜினிகாந்த் ஏற்கனவே பத்மபூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, பிலிம்பேர் விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது போன்ற பல விருதுகளை பெற்றிருந்த நிலையில் தற்போது அவருக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
இந்த விருது அவருக்கு இம்மாதம் நடைபெறவுள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவின்போது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஜினிகாந்த் ஏற்கனவே பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும், ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கவுள்ள நிலையிலும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது