கலெக்டர் புகாரளித்தால் தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை - ராஜ்மோகன் பேட்டி...
தொகுதி பிரச்சனை காரணமாக தன்னை சந்திக்க வந்த கார்த்திக் என்பவரை துறையூர் எம்.எல்.ஏ மற்றும் துணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக புகார் எழுந்தது. அதன்பின் கார்த்திக்கை மிரட்டி ஒரு வீடியோவையும் அவர் பேச வைத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இதை ஜோதி மணி உள்ளிட்ட பலரும் கண்டித்திருந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ விக்னேஷ் மீது கலெக்டர் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார். தவறு செய்தது யாராக இருந்தாலும் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

