1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay conduct mla meeting tomorrow

சர்ச்சையில் சிக்கும் தவெக எம்.எல்.ஏக்கள் - நாளைக்கு மீட்டிங் போடும் முதல்வர் விஜய்

vijay
துணை சபாநாயகர் ரவிசங்கரை அவரின் தொகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது பகுதியில் தண்ணீர் வரவில்லை என புகார் சொல்ல சென்ற போது ரவி சங்கர் அவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கார்த்திக் ஒரு வீடியோ வெளியிட்டார். அதன்பின் ரவி சங்கரை சந்தித்த கார்த்தி ரவிசங்கருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.. அது போலி வீடியோ என பேசி ஒரு வீடியோ வெளியானது.

ஆனால் அதன் பின்  மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்ட கார்த்திக் என்னை ரவிசங்கரும், இன்ஸ்பெக்டரும் சேர்ந்து மிரட்டி அப்படி பேச வைத்தனர் என கூறியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

அதேபோல் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இப்படி தொடர்ந்து தவெக எம்.எல்.ஏக்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இதையடுட்து, இந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்கவும், எச்சரிக்கவும் நாளை காலை 11 மணிக்கு பனையூரில் முதல்வர் விஜய் மற்றும் ஆனந்த் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ள வேண்டும், உடனே சென்னைக்கு வரவேண்டும் என தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது. அப்போது தொகுதி பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தவெக தரப்பில் சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா?.. 12 மணிக்கு தீர்ப்பு...