விஜய்க்கு சீமான்கிட்ட போறாதுதான் ஒரே வாய்ப்பு!.. ரங்கராஜ் பாண்டே ராக்ஸ்!...
நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.. சினிமா நடிகராக இருந்தவர் அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். சினிமாவில் நடித்தபோது போது எப்படி அவர் எல்லா விஷயங்களுக்கும் அமைதியாக இருந்தாரோ, அரசியல்வாதியான பின்னரும் அப்படியே அமைதியாகவே இருக்கிறார்.. இதை பலரும் விமர்சனம் செய்தாலும் அவர் கண்டு கொள்வதில்லை.. ஏனெனில் விஜய் பேசுவதில்லை.. ஆனால் அவரை பற்றிதான் எல்லோரும் பேசுகிறார்கள் என நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் பேசி அவரை ஏத்தி விடுகிறார்கள்.
ஒருபக்கம் அவர் கட்சியில் உள்ள சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனே போன்றவர்கள் மேடைகளில் பேசும்போது விஜய்தான் அடுத்த முதலமைச்சர் என பேசுவதை விஜயும் நம்புகிறார்.. அதேநேரம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கும் விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். அப்போதுதான் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என பலரும் சொல்லி வருகிறார்கள்.. இந்த கருத்தை அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து சொல்லி வருகிறது.. ஆனால் விஜய் இப்போது வரை அதிமுக-பாஜக கூட்டணியில் இணையவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே விஜய்க்கு இப்போது இருக்கும் ஒரே ஆப்சன் சீமான் மட்டும்தான். ஏனெனில், காங்கிரஸ் தன்பக்கம் வரும் என விஜய் எதிர்பார்த்தார்.. ஆனால் அவர்கள் திமுக கூட்டனிக்குதான் செல்வார்கள்.. விஜய் கட்சி ஆரம்பித்தபோது சீமானை கூப்பிட்டு இருந்தால் அவரே விஜயை நேரில் சென்று பார்த்திருப்பார்.
ஆனால் இப்போது விஜய்தான் சீமானை சந்திக்க வேண்டும்.. தொகுதிகளை பாதியாக பிரித்து நீங்கள் நானும் போட்டியிடலாம் என்றுதான் சீமான் சொல்வார்.. இதுதான் விஜயின் இப்போதைய நிலை என்று பேசியிருக்கிறார்.