தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தான்.. மற்ற கட்சிகள் தேர்தல் அறிவித்தவுடன் கரைந்துவிடும் ராஜேந்திரபாலாஜி
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டிப் பல்வேறு புதிய சக்திகள் உருவெடுத்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும்தான் இறுதிவரை களத்தில் நிற்கும்; மற்ற கட்சிகள் தேர்தல் அறிவித்தவுடன் பனிபோல கரைந்துவிடும்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இது விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை மறைமுகமாக சாடும் ஒரு கருத்தாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாறு பலமுறை மூன்றாவது அணிகளை சந்தித்திருந்தாலும், இறுதியில் வெற்றி என்பது இரு திராவிட கட்சிகளுக்கிடையிலான போட்டியாகவே முடிந்துள்ளது என்பதை ராஜேந்திரபாலாஜி சுட்டிக்காட்டுகிறார்.
தேர்தல் நேரத்தில் உருவாகும் புதிய கூட்டணிகளும், மக்கள் செல்வாக்கும் வாக்குப்பதிவு நெருங்கும் வேளையில் சிதறிவிடும் என்பது அவரது கணிப்பு. குறிப்பாக, விஜய்யின் வருகை திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று சொல்லப்படுவதை அதிமுக தரப்பு ஏற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
Edited by Siva
