செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (14:45 IST)

தமிழக அரசின் இந்த முடிவு தற்கொலைக்கு சமமானது: ராமதாஸ் மீண்டும் கண்டனம்!

அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக கடந்த சில மாதங்களாக அதிமுக அரசுக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்தது என்பது தெரிந்ததே

 
இந்த நிலையில் திடீரென அதிமுக அரசை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அவர் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே ஒரு சில விஷயங்களுக்காக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்த டாக்டர் ராமதாஸ் தற்போது சென்னையில் எரி உலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் 15 இடங்களில் குப்பை எரி உலை அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்றும் எந்த நன்மையும் தராத உடல் நலன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் இந்த திட்டம் தற்கொலைக்கு சமமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்