தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவுக்கு பை பை... தனித்து போட்டியிடும் பாமக!!
- 10 முதல் 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்! – ராமதாஸ் கோரிக்கை!
- சட்டப்பேரவை கூட்டம் நேரடி ஒளிபரப்பு! – அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!
- 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!
- பள்ளிகளை மூடி மீண்டும் ஆன்லைன் வகுப்பு ஆரம்பியுங்கள்: பாமக ராமதாஸ் கோரிக்கை
அம்மா மினி கிளினிக்கில் மீண்டும் பணி - ராமதாஸ் வரவேற்பு
அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பின்வருமாறு... கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரும்படி சுகாதார துறை அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். மருத்துவர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதற்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராடி வருவதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படியும் நேற்று வலியுறுத்தியிருந்தேன்.
ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
மருத்துவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் தீர்வு தற்காலிகமானதாக இருக்க கூடாது. அனைத்து அம்மா கிளினிக் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தி அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அரசு முன்வர வேண்டும்.
மருத்துவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் தீர்வு தற்காலிகமானதாக இருக்க கூடாது. அனைத்து அம்மா கிளினிக் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தி அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அரசு முன்வர வேண்டும்.
