திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (12:55 IST)

10 முதல் 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்! – ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிகளிலும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 முதல் 12 வகுப்புகள் வரையிலும் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க இருப்பதால் பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது அவர்களிடையே கொரோனா பாதிப்பை தீவிரமாக்கும் அபாயம் உள்ளதாகவும், மாணவர்கள் நலன் கருதி 10 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.