புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:22 IST)

2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன. ஓராண்டு அடிப்படையில் தற்காலிக அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன.  அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது. 
 
இதையடுத்து அம்மா மினி கிளினிக்கிற்கு நியமிக்கப்பட்ட 1,820 மருத்துவர்களும் கொரோனா பணியில் உள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் செயல்பாடின்றி கிடந்த 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.