அதிமுகவுக்கு பை பை... தனித்து போட்டியிடும் பாமக!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,820 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இதில் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு நாம் சந்திக்கும் நிகழ்வு, வெற்றி நிகழ்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.