வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 30 டிசம்பர் 2021 (13:19 IST)

பள்ளிகளை மூடி மீண்டும் ஆன்லைன் வகுப்பு ஆரம்பியுங்கள்: பாமக ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாலும் மூன்றாவது அலையை தடுக்கவும் உடனடியாக பள்ளி கல்லூரிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மீண்டும் ஆன்லைன் வகுப்பு ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் உடன் நடத்தப்படும் இந்த ஆலோசனைக்கு பின்னர் நாளை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.