என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது..! – புதிர் போடும் ராமதாஸ்!

ramadoss
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:45 IST)
அரசியல் சாணக்கியர் என்று பலராலும் அழைக்கப்படும் பிரசாத் கிஷோர் மீது கருத்துருவை திருடியதாக புகார் எழுந்துள்ளது குறித்து கிண்டல் செய்யும் தோனியில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

பீகாரில் நல்லாட்சி தருவதற்காக பாத் பீகார் கி என்ற அமைப்பை பிரசாத் கிஷோர் உருவாக்கியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்கனவே ஒருவர் பதிந்திருந்த பீகார் கி பாத் என்ற கருத்துருவின் திருட்டு என பிரசாத் கிஷோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரசாத் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தோடு திமுக 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு வியூகம் அமைத்து வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துரு திருட்டை யார் யாரிடமிருந்து கற்றுக் கொண்டது என்று கிண்டல் செய்யும் தோனியில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ”பிகாரில் நல்லாட்சி வழங்குவதற்கான தமது கருத்துருவை பிரசாந்த் கிஷோர் திருடிவிட்டதாக புகார். வழக்குப் பதிவு : செய்தி - சரி தான்.பிரசாந்த் கிஷோர் தமிழக கூட்டாளிக்கு கற்றுத் தருகிறாரா...தமிழக கூட்டாளியிடம் கற்றுக் கொள்கிறாரா? என்பதே தெரியவில்லையே? என்னவோ நடக்குது... ஒன்னுமே புரியலை” என்று குறிப்பிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :