ஜெயலலிதாவை கண்டால் மு.க.ஸ்டாலின் நடுங்குவார்! – செல்லூர் ராஜு!

sellur raju   stalin
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (10:44 IST)
மதுரையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “மு.க.ஸ்டாலினின் முதல்வர் ஆசை நடவாத காரியம்” என பேசியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பிறகு பேசிய அவர் ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். அவரை தவறாக எடைப்போட்டவர்கள் பின் நோக்கி சென்றிருக்கிறார்கள். அண்ணா வளர்த்த கட்சியை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துவிட்டு, தற்போது ஆட்சியை பிடிக்க பீகாரி ஒருவரின் உதவியை நாடியிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பது தமிழனுக்கு தெரியுமா? பீகாரிக்கு தெரியுமா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”எம்ஜிஆர் மலையாளியாக அவரை தலைவராக ஏற்றுக்கொண்டு ஒன்றரை கோடி தொண்டர்களும் தூக்கி நிறுத்தினோம். ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் திராவிட கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சட்டசபையில் ஜெயலலிதாவை கண்டாலே மு.க.ஸ்டாலின் நடுங்குவார். மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு நடவாத காரியம்” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :