ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 மார்ச் 2019 (15:33 IST)

விஜயகாந்த் - ராமதாஸ் திடீர் சந்திப்பு !

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் பாமக கட்சிகளின் தலைவர்களான விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் இன்று சந்தித்துள்ளனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது பாமகவுக்கு ஒதுக்கியதைப் போல தங்களுக்கும் 7 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென தேமுதிக முரண்டு பிடித்தது. இதனால் பாமக தேமுதிக மீது அதிருப்தியில் இருந்தது. தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டாம் என அதிமுகவுக்கு அழுத்தம் அளித்தது.

ஆனால் ஒருவழியாக அதிமுக கூட்டணியில் 4 சீட்டுகளுக்கு ஒத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளது. ஆனாலும் பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் இணக்கமான போக்கு இல்லை என்ற பேச்சு எழுந்தது. அதைப் போக்கும் விதமாக இன்று ராமதாஸ் விஜயகாந்தின் இல்லத்தில் சென்று அவரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி, நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அதிமுக நிர்வாகி கோகுல இந்திரா உள்ளிட்டோரும் கூட இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ‘விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தோம். அந்தச் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது.’ மேலும் தொகுதிகள் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் கண்டிப்பாக பாமக பிரச்சாரத்தில் ஈடுபடும் என்றும் கூறினார்.