வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (13:30 IST)

முதல்வரும் துணை முதல்வரும் பதவி விலகவேண்டும் – பாமக இணையதளத்தால் புது சர்ச்சை !

பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள சில செய்திகளால் புதிய சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பாமக எடப்பாடிப் பழனிச்சாமி தலைமையிலான் ஆதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தது. அக்கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவருக்குமே நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது எனக் கூறினார்.

அதுபோல பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல்கள் தொடர்பாக புத்தகங்களை அச்சிட்டு அதனை ஆளுநரிடம் புகாராகக் கொடுத்தார். நடக்கும் ஊழல்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் பதவி விலகவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஆனால் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு அதிமுகவோடு பாமக கூட்டணிக் கைகோர்த்தது. அதோடு மட்டுமல்லாமல் அதிமுக அரசை இப்போது பாராட்டியும் வருகிறது. ஆனால் முன்னர் இருவரையும் பதவி விலகக்கோரிய குற்றச்சாட்டை இன்னமும் தங்கள் இணையதளத்தில் இருந்து நீக்காமல் அப்படியே வைத்துள்ளது.

பாமகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றவுடனே ‘CM AND DEPUTY CM MUST RESIGN : PMK’ எனும் பாப் அப் இன்னமும் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.