தேமுதிக நிர்வாகி சொன்ன ’அந்த ஒரு வார்த்தை ’ : கண்கலங்கிய விஜயகாந்த்

dmdk
Last Updated: வியாழன், 14 மார்ச் 2019 (13:54 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திமுக, அதிமுக, பாஜக, போன்ற கட்சிகளின் தலைமை வேட்ளார்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன.
தற்போது அதிமுக கூட்டணியில் 4 சீட் பெற்றுள்ள தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. இதில் அனைத்து வேட்பாளர்களிடமும் கல்விசான்றிதழ், ரிசர்வ் தொகுதி என்றால்,அதற்குரிய சான்றிதழ், ஆகியவற்றை கொண்டுவரவும் கட்சிதலைமை உத்தரவிட்டது.
 
இதனடிப்படையில் நெல்லை தொகுதியில் போட்டியிட ஆனந்த மணி என்பவர்  விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். தலைமை அலுவலகத்தில் நேர்காணல் குழுவினர் அவரிடம் நேர்காணல் நடத்தினர். அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பு பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அப்போது இருந்தார்.
 
அதற்கு ஆனந்தமணி  கூறியதாவது: தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று நான் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. நான் கேப்டனை பார்க்கவே வந்தேன். என்று தெரிவித்தார். 
இந்த பதிலைக் கேட்ட’ விஜயகாந்த் கண்கலங்கி நெகிழ்ந்துள்ளார்.’ நீண்ட காலத்திற்குப் பிறகு கட்சியினர் விஜயகாந்தை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :