வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (16:50 IST)

10 நாட்கள் கழித்து ரஜினி-பெரியார் பிரச்சனைக்கு பதில் கூறிய டாக்டர் ராமதாஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் கலந்து கொண்ட போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அவரை குற்றஞ்சாட்டினார்
 
ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அது தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அனைத்து அரசியல்வாதிகளும் ரஜினியை விமர்சனம் செய்து ஓய்ந்து விட்ட நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இந்த பிரச்சினை குறித்து கூறியதாவது:
 
பெரியார் என்பவர் பகுத்தறிவு பகலவன். அவர்தான் எங்களுக்கு அரசியல் வழிகாட்டி. தமிழக அரசியலில் அவர் மிக முக்கியமானவர். பெரியார் கருத்துக்கள்தான் தமிழக அரசியலில் இப்போதும் முக்கியமானதாக உள்ளது. அனைவரும் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  
 
1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து கடவுளான ராமர் இழிவுப்படுத்தப்பட்டதாக ரஜினி கூறியுள்ளார். அப்படி ரஜினி பேசி இருக்க கூடாது. பெரியார் பற்றி பேசுவதை ரஜினி தவிர்த்திருக்கலாம். எப்பொழுதுமே ரஜினி செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பார். ஆனால் இந்த முறை அவசரப்பட்டு இப்படி பேசிவிட்டார்.  
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.