அரசியல் பயணம் மதுரையில ஸ்டார்ட்!? – நம்மவர் ரூட்டில் ரஜினிகாந்த்?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ள கட்சியின் முதல் பொதுகூட்டம் மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியை பதிவு செய்தல், சின்னம் வாங்குதல் என அதிகாரப்பூர்வ செயல்பாடுகள் ஒருபக்கமும், கட்சிக்கு உறுப்பினர்கள், பூத் கமிட்டி, தேர்தல் பணிகள் என மறுபுறமும் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பொதுக்கூட்டம் நடத்தி அதில் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த ரஜினிகாந்த் மதுரையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இதற்காக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்னதாக மதுரையில் தக்க இடத்தை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக மக்கள் நீதி மய்யத்தை கமல்ஹாசன் தொடங்கியபோது முதல் பொதுக்கூட்டத்தை மதுரையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.