1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt announced rules for jallikattu

கொரோனா கால ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு..! ரூல்ஸ் இதுதான்! – தமிழக அரசு

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் தை மாதத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விழாக்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தை திருநாள், பொங்கல் அதை தொடர்ந்த விளையாட்டு போட்டிகளுக்கும் மக்கள் தயாராகி வரும் நிலையில், கொரோனா தொற்று ஏற்படாமல் இவ்விழாக்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தை மாதத்தில் நிகழும் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு முதலான விளையாட்டு நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டில் 300 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. மாடுபிடி வீரர்கள் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே பங்கு பெற வேண்டும். விளையாட்டு நடைபெறும் மைதானத்தின் பரப்பளவிற்கு ஏற்ப 50% பார்வையாயாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மோடியா? இந்த லேடியா? ஜெ.வுக்காக பரிந்து பேசும் உதயநிதி??