’ரஜினி காந்த் ஒரு வெற்றுப் பிம்பம்’... தமிழர்களால் தூள் தூளாகும் - சீமான் ஆவேசம் !

rajini
சினோஜ் கியான்| Last Updated: வியாழன், 21 நவம்பர் 2019 (19:23 IST)
’தமிழ்நாட்டில் வரும்  2021 ஆம் ஆண்டு மிகப்பெரும் அதிசயத்தை தமிழக மக்கள் நூற்றுக்கு நூறு நிகழ்த்துவார்கள்’ என தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’ரஜினி எந்த அடிப்படையில் அதிசயம் நிகழப் போகிறது என கூறினார் என தெரியவில்லை. அவர் கட்சி தொடங்கிய பின் தான் அவரது கொள்கைகள் மற்றும் கருத்துகள் குறித்து கூற முடிவும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இளைஞர்களைத் தன்பேச்சால் கவருகிற பிரபல இயக்குநர், நடிகர், மற்றும் நாம் தமிழர் கட்சியின்  கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், ரஜினியின் அதிசயம் நிகழப்போகிறது என்ற  கருத்துக்கு கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது;
 
’அதீத ஊடக வெளிச்சம் மூலம்  ஊதிப்பெருதாக்கப்பட்ட ரஜிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம், இனமான  தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் வரும் 2021 ல் நடக்கும் நடந்தே தீரும் என சீமான் தனது  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.’
 
சீமானுக்கு அதிகமான இளைஞர்கள் பட்டாளம் இருப்பதைப் போன்று ரஜினிக்கு மிக அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்பதால், இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும், ரஜினியை இனமான தமிழர்கள் தோற்கடிப்பார்கள் என சீமான் கூறியுள்ள போதிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினி தனது கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் தன் ’ஆன்மீக அரசியலை’ பற்றி வெளியிடும் போது தனது பூர்வீகம் ’தமிழ்நாடு கிருஷ்ணகிரி ’என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீமான், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கும்   பிறரது கருத்துகளுக்கு எதிராக அரசியல் செய்கிறாரா? இல்லை திராவிட கட்சிகளைப் போல் வெறுப்பு அரசியலைக் கையில் எடுக்கிறாரா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :