”கல்விக்கொள்கை ஒரு புல்டோசர்”.. வைகோ ஆவேசம்
மத்திய அரசின் கல்விக் கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் என வைகோ விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர். குறிப்பாக நடிகர் சூர்யா கல்விக் கொள்கை குறித்து விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய கல்விக்கொள்கை அல்ல, அது மாநில உரிமைகளை தரைமட்டமாகும் புல்டோசர் என மாநிலங்களவையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
எப்பொழுதும் மத்திய அரசை விமர்சித்து வரும் வைகோ, காஷ்மீர் பிரச்சனையில் மாநிலங்களவையிலேயே தனது விமர்சனத்தை வைத்தார். இந்நிலையில் தற்போது மாநிலங்களவையில் மத்திய கல்விக் கொள்கை குறித்து குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.