நான் சொன்னா கேப்பாங்களா? – ரஜினி, கமல் குறித்து டி.ஆர்!
ரஜினி, கமல் அரசியல் நுழைவு குறித்து டி.ராஜேந்தர் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார். ரஜினி கட்சி ஆரம்பிக்க போகிறார். இந்நிலையில் இருவரும் மக்களுக்காக தேவைப்பட்டால் கூட்டணி அமைப்போம் என கருத்து தெரிவித்துள்ளனர். இது தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க, ரஜினி, கமலுக்கு அட்வைஸ் செய்யும் தோனியில் பேசியுள்ளார் இயக்குனர் டி.ராஜேந்தர்.
செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் “அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது. அதை தாண்டு அதிர்ஷ்டம் வேண்டும். ரஜினி, கமலை விட அரசியலில் நான்தான் சீனியர். அதற்காக ரஜினி, கமல் குறித்து நான் எதுவும் கருத்து சொல்லப்போவதில்லை. சொன்னாலும் யார் கேட்பார்கள்?” என்று கூறியுள்ளார்.
திமுகவில் தொடர்ந்து இருந்து வந்த டி.ராஜேந்தர் 2004ல் அதிலிருந்து வெளியேறி அனைத்து இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கியதும், பின்னர் அந்த கட்சி இருப்பதே பலருக்கு தெரியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.