செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (08:50 IST)

சிஏஏ சட்டம்: ரஜினிகாந்த் பதிவு செய்த பரபரப்பு டுவீட்

சிஏஏ சட்டம்: ரஜினிகாந்த் பதிவு செய்த பரபரப்பு டுவீட்
சிஏஏ என்ற குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசியதால் இஸ்லாமிய அமைப்பினர்களின் அதிருப்திக்கு ஆளான ரஜினிகாந்த், சமீபத்தில் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தார்
 
அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் என்ற இஸ்லாமிய தலைவரை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், நேற்று ஒருசில இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேசினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த சந்திப்பிற்கு பின்னர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டம் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருக்கின்றார் என்றும் இந்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கண்டிப்பாக குரல் கொடுப்பார் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் பேட்டி அளித்தனர் 
 
இந்த நிலையில் ரஜினிகாந்து இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனைகளை கேட்டு அறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும் ஒற்றுமையும் அமைதியும் ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது