செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (12:55 IST)

நாம் எல்லோரும் சேர்ந்து அழுத்தம் கொடுப்போம் – பல்டி அடித்தாரா ரஜினி?

இஸ்லாமிய மத குருமார்கள் நடிகர் ரஜினியை சந்தித்துள்ள நிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நடிகர் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து இன்று சிஏஏவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜினிகாந்தை சந்தித்தனர். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ”சிஏஏ தொடர்பாக நிலவும் அச்சம் குறித்து ரஜினிகாந்திடம் பேசினோம். இதுகுறித்து நாம் அனைவரும் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக பேசிய ரஜினி தற்போது தனது கருத்தை மாற்றிக்கொண்டு விட்டாரா என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் அவர் குறிப்பாக எது குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறினார் என்பது குறித்து சரியாக தெரியவரவில்லை