1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (22:33 IST)

டெல்லியில் திட்டமிட்டபடி சிபிஎஸ்சி தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்து கலவரம் மூண்டது. சுமார் 40 பேர் வரை இந்த கலவரத்தில் பலியாகி உள்ளதாகவும், சுமார் 100 பேர் வரை இந்த கலவரத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் டெல்லியில் திட்டமிட்டபடி மார்ச் 2ஆம் தேதி சிபிஎஸ்சி தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது ஏனெனில் சிபிஎஸ்சி தேர்வு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அதற்குள் டெல்லியில் நிலைமை முற்றிலும் சரியாக வருமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கொன்றில் டெல்லியில் மார்ச் இரண்டாம் தேதி திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அனைத்து உதவிகளையும் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் டெல்லி அரசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
இதனை அடுத்து தகுந்த பாதுகாப்புடன் சிபிஎஸ்சி தேர்வு நடைபெறும் என தெரிகிறது. இருப்பினும் சில பள்ளிகள் கலவரத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பள்ளிகளில் எவ்வாறு தேர்வு நடத்த முடியும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது