தொடர்புடைய செய்திகள்
- கமலை வைத்து பிரம்மாண்ட போட்டோஷூட் – லோகேஷின் வித்தியாசமான முயற்சி!
- அவர் நல்ல மனுசன்; அரசியலுக்கு வரலைன்னா விட்டுடுங்க! – ராஜேந்திர பாலாஜி டூ ரஜினி!
- கமல் & லோகேஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான ரகசியம்!
- ரஜினி…சாதி,, மத வெறியர்களின் கையில் சிக்காமல் இருப்பதே நல்லது – திருமாவளவன்
- நீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க! – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்
படுத்து கொண்டே ஜெயித்த எம்ஜிஆர்: வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி?
வீட்டுக்குள் இருந்தே ஜெயிக்க போகிறாரா ரஜினி?
தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள் உடல் நலக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது படுத்துக்கொண்டே ஒரே ஒரு வீடியோவை மட்டுமே வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்பது தெரிந்ததே
அந்த வகையில் ரஜினிகாந்தும் வரும் தேர்தலில் பிரச்சாரத்திற்கு செல்லாமல் வீட்டுக்குள் இருந்தபடியே பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. நவீன தொழில்நுட்பமான ஹோலோகிராம் முறையில் 3டியில் அவர் பேசும் வீடியோக்கள் பட்டி தொட்டி எங்கும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் இதை பார்க்கும்போது ரஜினியே நேரில் நின்று பேசுவது போன்ற இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் அவர் வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் எம்ஜிஆர் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றது போல் வீட்டிலிருந்து பிரச்சாரம் செய்து ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் அஜித் நடித்த விவேகம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய தொழில் நுட்பம் மூலம் ரஜினி பிரச்சாரம் செய்தால் மக்களிடம் போய் சேருமா? அவரது தொழில்நுட்ப பிரச்சாரம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
